Wednesday, June 30, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 2

3. "சிவனை வழிபடுகிறவர்கள் சைவர்கள். விஷ்ணுவை வழிபடுவோர் வைணவர். சக்தியை வழிபடுவோர் சாக்தர். இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர். குமரனை வழிபடுவோர் கௌமாரமதத்தவர்" என்று இப்பகுதியிலேயே பிறிதோர் இடத்தில் எழுதுகிறார் ம.பொ.சி. இக்கூற்றுகளில் உள்ள பெரியதொரு குழப்பத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இக்கூற்றின்படி பார்த்தால் திருமாலையும், முருகனையும் பாடியிருக்கும் கடுவன் இளவெயினனார் என்னும் சங்ககாலப் புலவர் வைஷ்ணவ மதத்தையும், கௌமார மதத்தையும் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டிவரும். மிகப் பிற்காலத்தில் (600 - வருடங்களுக்குள்) கற்பிக்கப்பட்டதாக நமது 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலில் நிலைநாட்டப்பெற்ற ஷண்மதங்களின் கடவுளர் அறுவரையும் வழிபடுகிறவர்கள் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், ஸௌரம் எனும் ஆறுமதங்களையும் சேர்ந்தவர்கள் என்னும் விசித்திரநிலை ஏற்படும். சங்ககாலத்தில் இந்திரன் வழிபாட்டையும், வருணன் வழிபாட்டையும், முருகன் வழிபாட்டையும், 'காடுகாள்' எனப்படும் கொற்றவை (சக்தி) வழிபாட்டையும், சிவன் வழிபாட்டையும், திருமால் வழிபாட்டையும் செய்துவந்தவர்கள் ஐந்திரேயம், வாருணம், கௌமாரம், சாக்தம், சைவம், வைஷ்ணவம் என்னும் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் என்று சொல்லவேண்டிய அதிவிசித்திரநிலை ஏற்படும். இன்றுள்ள இந்துக்கள் பலர் தங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக நாகூர் முதலான இஸ்லாமியத் தலங்களுக்கும், வேளாங்கண்ணி முதலான கிறித்துவத் தலங்களுக்கும் சென்று வழிபடுகிறார்கள். அந்த இந்துக்களை அவர்கள் தழுவிநிற்கும் சைவம் அல்லது வைஷ்ணவ மதத்தோடு, இஸ்லாமிய மதத்தையும், கிறித்துவமதத்தையும் தழுவி நிற்பவர்கள் என்று சொல்லவேண்டிய வேடிக்கையான நிலை ஏற்படும்.

4. இந்த அவத்தத்தைத் தவிர்க்கவேண்டுமானால் 'மதம்' என்னும் சொல்லுக்குச் சரியான பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டும். சைவம், வைணவம் முதலான மதங்கள் வேதசாத்திரங்களில் காணப்படும் கடவுளர்களில் ஒருவரைப் பரம்பொருளாகவும், மற்ற கடவுளரை அவருக்கு அடங்கியவர்களாகவும் கொள்ளும் மதங்களேயாம். இம்முறையில் காணும்போது சிவனைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சைவம் என்றும், விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் வைஷ்ணவம் என்றும், சக்தியைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சாக்தம் என்றும் கொள்வதே தக்கது. மதம் என்பதற்கு 'கொள்கை' என்று பொருளேயொழிய வழிபாடு என்று பொருளல்ல. இந்த சரியானப் பொருளைக்கொண்டால் முற்கூறிய விசித்திரமான (வேடிக்கையான) நிலைகள் ஏற்படமாட்டா. இந்த சரியான பொருளைக் கொண்டு பார்க்கும்போது விஷ்ணு ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டவர்களாகவே சங்ககாலத்தில் புலவர்கள் அனைவரும் இருந்தனர் என்று வெளிப்படையாகச் சங்கநூல்களில் காணக்கிடக்கிறது. அக்காலத்தில் வைஷ்ணவமதம் ஒன்றே வைதிக மதமாகச் சான்றோர்களால் கொள்ளப்பட்டது என்னும் நிலையையே இது காட்டுகிறது. இவ்விஷயத்தை நமது சங்ககாலத் தமிழர் சம்யத்தில் 27 - பக்கங்களில் விரிவாக நிலைநாட்டியுள்ளோம்.

5. (1) உலகைப் படைத்தளித்து அழிக்கும் பெருமை. (2) எல்லாம் அறியும் பெருமை. (3) எல்லாம் வல்லவனாய் இருக்கை. (4) எங்கும் வியாபித்திருக்கை. (5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை. (6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை. (7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை. (8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை. (9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை - என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன என்றும், சிவன், கொற்றவை, முருகன், இந்திரன், வருணன் முதலான எந்த தெய்வத்திற்கும் இத்தன்மைகள் உள்ளதாகக் கூறப்படவில்லையென்றும் முற்கூறிய நூலில் பற்பல ஆதாரங்களைக் காட்டி நிரூபித்திருக்கிறோம். ஓராதாரமும் காட்டாமல் "சங்ககாலத்தில் இந்த இருவேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்றும், "பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்தும் பக்திப்பாடல்களே" என்றும் திரு. ம. பொ. சில். எழுதுவது நேர்மையாகுமா என நடுநிலைநிற்போர் சிந்திக்கட்டும்.

6. திருமாலைப் பற்றிய பரிபாடல்கள் வெறும் பக்திப்பாடல்கள் அல்ல. "அக்காலத்தில் சான்றோர்கள் அனைவரும் திருமால் ஒருவனையே முற்கூறிய பத்து பெருமைகளையுமுடைய பரம்பொருளாகக் கொண்டிருந்தார்கள்; வேறு எந்த தெய்வத்தையும் அப்படிக் கொள்ளவில்லை" என்பதை நிலைநாட்டித்தரும் 'கொள்கை விளக்கப் பாடல்'களும் ஆகும் அவை என்பதை நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டி நமது நூலில் நிர்ணயித்து இவர் கையிலும் கொடுத்திருக்க, அதைக் காணாததுபோல் இப்படி எழுதுவது எந்த நியாயத்தில் சேர்ந்தது என்பதை நடுநிலையாளர்கள் நிர்ணயிப்பார்களாக. அந்நூலை இவர் தவறவிட்டிருக்கலாமாகையால் இவருக்கு மறுபடியும் அந்நூலில் ஒரு பிரதி அனுப்புகிறோம். நேர்மையிருந்தால் அந்நூலை இசைவதோ அல்லது ஆதாரங்காட்டி மறுப்பதோ செய்ய வேண்டும்.

7. தமது கட்டுரைத் தொடரின் முதல்பகுதியில் தொல்காப்பியத்தில் திருமாலானவர் முல்லைநிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார் என்றும், அவ்வண்ணமே முருகன் முதலான தெய்வங்கள் குறிஞ்சி முதலான நிலத்து மக்களின் தெய்வங்களாக வருணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறுவதன்மூலம் திருமாலை ஒரு நிலத்துக்குரியவரேயொழிய, எல்லா நிலத்துக்குமுரிய பரம்பொருளாகச் சங்ககாலத்தில் கொள்ளப்படவில்லை என்று படிப்பவர்களின் மனத்தில் குழப்பத்தை விளைக்க முயலுகின்றார் ம. பொ. சி. இக்குழப்பத்தை ஆதாரத்தோடு நீக்குகின்றோம் இனி.

16 comments:

Rajewh said...

வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரையில்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்றிராதே_ அவனாம்
அவனே எனத்தௌ¤ந்து கண்ணனுக்கே தீர்ந்தாய்
அவனே எவனேனும் ஆம்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே

Nammaazhvar

குமரன் (Kumaran) said...

நல்ல நல்ல பாசுரங்களா கொடுத்திருக்கீங்க. பின்னூட்ட விதிகளின் படி அதுக்குப் பொருளும் சொல்லுங்க. :-)

அப்பத் தான் இந்த இடுகைக்கு இந்தப் பின்னூட்டம் எப்படி பொருந்துதுன்னு இன்னும் நிறைய பேருக்குத் தெரியும். :-)

Rajewh said...

வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரையில்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே
பொருள்:-
வணங்கும் துறைகள் பலவற்றையும், சமயங்கள் பலவற்றையும் அவைகள் உண்டாக்கும். தெய்வங்கள் பலவற்றையும், நீயே ஆக்கி உன் உருவத்தையே பரவ வைத்திருக்கிறாய். உனக்கு இணை யாரும் இல்லை. உன்மேல் எனக்கு வேட்கை எழுகிறது.
இந்தப் பாடலில் 'ஆகி' என்பதற்கு பதில் 'ஆக்கி' என்று சொல்லியிருப்பது சிந்திக்க வைக்கிறது. எல்லா தெய்வங்களிலும் செய்தவன் விரவியவன் திருமாலே என்னும்போது யாரைத் தொழுதாலும் திருமாலையே போய்ச் சேர்ந்து விடுகிறது

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்றிராதே_ அவனாம்
அவனே எனத்தௌ¤ந்து கண்ணனுக்கே தீர்ந்தாய்
அவனே எவனேனும் ஆம்
பொருள்:-

கடவுள் யார் என்பதைப் பற்றி பல சந்தேகங்கள். அது அவனா இவனா இல்லை இரண்டு பேருக்கு இடையில் உள்ள உவனா, வானத்தில் இருப்பவனா என்றெல்லாம் கலங்க வேண்டாம், உறுதியாக அவன் இவன் உவன் வானவன் எவனும் கண்ணனேதான். மண்ணை வழ்பட்டலும் கல்லை வழிபட்டாலும் பெண்ணை வழிபட்டாலும் அனைத்தும் கண்ணனே ஆம்
.
இப்படி அனைத்தும் கண்ணனே! பரம்பொருள் கண்ணனே ! ! என்று தெளிவுபடுத்திய ஆழ்வார்
எதற்கு சமயம் பல தோற்றுவித்தார்! அவரே ஒருவரே இருக்கலாமே என்ற கேள்வி எழலாம்!
எல்லா மனிதர்களுக்கும் எல்லாமே பிடிக்கும் என்று சொல்லமுடியாது! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரியம்! சிலர் ஐஸ் கிரீம் பிடிக்கும் , சிலருக்கு அல்வா பிடிக்கும்! அதுபோலவே எல்லாரும் ஒரே பழக்கவழக்கத்தில் வழிபட மாட்டார்கள்! அவரவர்க்கு பிடித்த பழக்கவழக்கத்தில் பிடித்த தெய்வங்களை வழிபடவே சமயம் பல ஆக்கி என்று திருமாலை கூறுகிறார் ஆழ்வார்!திருமாலே அனைத்து சமயங்களையும் தெய்வங்களையும் ஆக்கி என்று தெளிவுபடுதுகிறார் ஆழ்வார்! இன்னும் ஒரு சிலருக்கு வேறொரு சந்தேகம் எழலாம்! ஏம்பா பரம்பொருள் கண்ணனே என்றும் சமயங்களை அவரே தோற்றுவித்தார் என்றும் நம்மாழ்வார் ஞானத்தால் கூறினாரே! அப்படினா கண்ணனை மட்டும் நான் எப்படி வழிபடுவது நான் பிறப்பில் முஸ்லிம்! நான் பிறப்பில் கிறிஸ்டின்! எங்கள் குல தெய்வம் முனீஸ்வரர்! இல்லனா முருகர் , அம்மன் , அய்யனார் , என்று கேட்கலாம். அதற்கும் பதில் நம்மாழ்வார் கொடுக்கிறார். அதற்கு முன்பு இன்னொரு விஷயம்
சிவனை வழிபடுபவர் பெருமாள் கோவிலுக்கு சிலர் போக மாட்டார் . முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர் மற்ற கோவில்களுக்கு போக மாட்டார் அவங்களை என் நீங்க கோவிலுக்கு போக மாடீங்க என்று கேளுங்க! பொதுவாக அவர்கள் சொல்லும் பதில் போனால் பாவம். இல்லனா நாங்கள் வழிபடும் தெய்வமே சரி! நீங்கல்லாம் சும்மா! என்று வீண் வாக்குவாதம் செய்வார்கள்! என்ன காரணம் என்று கேட்கிறீங்களா! அதற்கும் நம்மாழ்வார் பாசுரத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார் பார்ப்போமா!

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே

, பொருள்:-

அவரவர் தங்கள் தங்கள் ஞானத்தால் அறியும் வகைவகையான தெய்வங்களை நம் தெய்வங்களாக அடி பணிவார்கள் அந்த அந்த தெய்வங்களும் குறையில்லாதவர்கள்தாம்
அவரவர் குல விதிப்படி வழிபட்டு பரம்பொருளை காண்கின்றனர் . எல்லாராலும் எல்லா வழிபாட்டையும் பின்பற்றி இறைவனை வழிபடுவது கடினம்.. இதுதான் காரணம்
அவரவர் தெய்வங்களின் விதிப்படி வழிப்பட்டு இறைவன் திருவடி அடைவர்.

!

This comment has been removed by the author.
குமரன் (Kumaran) said...

நல்ல விளக்கங்கள். நன்றி இராஜேஷ். திரும்பத் திரும்பச் சொன்னால் தான் எனக்கெல்லாம் புரியும்ன்னு நினைச்சுட்டீங்களா இராஜேஷ். இரவிசங்கர் நண்பன் தானே. ஒரு தடவை சொன்னாலும் புரியும். :-)

ஆனா இதெல்லாம் இந்த இடுகைக்குப் பின்னூட்டமா ஏன் சொன்னீங்கன்னு இன்னும் நீங்க தெளிவா சொல்லலையோன்னு ஒரு நினைப்பு. ஏதாவது காரணம் இருந்தா நேரடியா சொல்லுங்க. தயங்க வேண்டாம்.

Rajewh said...

குமரன் ஐயா! வணக்கம்
உங்கள் இந்த பதிவை படித்தவுடன் எனக்கு இந்த பாசுரங்கள் ஞாபகம் வந்தது.
அதுதான் . எதிர்காலத்தில் பதிபவர்கள் பயன் படட்டுமே என்று போட்டேன்.
நீங்கள் உங்களுக்காக என்று நினைத்து விட்டீர்களா! நல காமெடி பண்ணீங்க! ஹி ஹி நீங்கள் கரையை கடக்க தெரிந்தவர் என்று உங்கள் பல பதிவுகளிலேயே நான் அறிந்தேன். நானெல்லாம் இப்பதான் பாசுரமே படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் முழுமையாக முடிக்க கூட இல்லை. ஆர்வ கோளாறுல போட்டேன் .

அப்பாதுரை said...

பதிவும் அற்புதம்; பின்னூட்டமும் அற்புதம்!

Anonymous said...

சங்கக் காலத்தில் காளி, கார்த்திகேயன், விஷ்ணு இருந்தார்களா? என்னப்பா கொற்றவை, முருகன், மாயோன் தானே என்கிறீர்களா? அப்படியா? காளி தான் கொற்றவை என்றும், கார்த்திகேயன் தான் முருகன் என்றும் விஷ்னு தான் மாயோன் என்றும் யார் சொன்னது? இவர்கள் தான் அவர்களா? நிச்சயம் இல்லை ....

சங்கக் காலத்தில் வழிப்பட்ட கடவுளர்களுக்கும், பக்தி காலங்களில் வந்தேறிய கடவுளர்களும் ஒன்றே அல்ல.. ஆனால் மக்களை ஒருமைப்படுத்தவும், ஏற்கனவே இருந்த நாட்டார், காட்டார் தெய்வங்களை வேத தெய்வங்களோடு இணைக்கப்பட்டவை அவ்வளவே !!! அது அந்தந்த காலத்தின் கட்டாயத்தால் நிகழ்ந்தவை... சில சமயங்களில் வந்தேறி தெய்வங்கள் நாட்டார் தெய்வங்களாக ஆனக் கதையும் உண்டு. பௌத்த மத அர்கதன் அய்யனார் ( ஆர்யனார் ) ஆகியும் உள்ளது. அதற்காக வரலாறுகளை அறிந்து கொள்ளாமல் மெய்ஞானங்களை விளக்க முற்படுதல் தவறு... கம்பனின் கடவுள் சங்க கால கடவுள் இல்லை. அதற்காக கம்பனின் மத நம்பிக்கை இழிவானதா> நிச்சயம் இல்லை .. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு உயர்ந்ததே அதற்காக தவறானவற்றை பரப்பக் கூடாது

குமரன் (Kumaran) said...

நன்றி அப்பாதுரை.

குமரன் (Kumaran) said...

வாங்க இக்பால் செல்வன்.

1. முதலில் இந்தப் பதிவில் இருக்கும் எதுவுமே என் சொந்த எழுத்துகள் இல்லை. மேலே பதிவின் தலைப்பில் இட்டிருக்கும் குறிப்பைப் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இது நான் படிக்கும் பழைய நூல்களின் ஒருங்குறியாக்கங்களே. இந்தப் பதிவில் இருக்கும் கருத்துகள் இந்த நூலாசிரியரின் கருத்துகள். அனைத்தும் எனக்கு ஏற்புடைத்தன இல்லை. ஆனால் அவர் சொன்ன கருத்துகள் என்ன என்று படிக்கும் ஆர்வம் இருக்கிறது. படிக்கிறேன். படித்துக் கொண்டே ஒருங்குறியில் இங்கே இடுகிறேன். அவ்வளவு தான்.

2. இப்போது நீங்கள் சொல்லும் 'வரலாற்று உண்மைகள்' பற்றிய என் கருத்தைச் சொல்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் தெய்வங்கள் தான் விஷ்ணுவும், காளியும், கொற்றவையுமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு 'நிச்சயம் இல்லை' என்று ஒரு தீர்ப்பும் சொல்லியிருக்கிறீர்கள். சங்க இலக்கியங்களைப் படித்தால், அவற்றில் இந்த தெய்வங்களைப் பற்றி வரும் குறிப்புகளைப் படித்தால் நீங்கள் இப்படி உறுதியாகக் கருத்து சொல்ல மாட்டீர்கள் என்பது என் எண்ணம். இப்படிப்பட்ட கருத்துகளைப் பல இடங்களில் படித்ததால் தான் நேரடியாக சங்க இலக்கியங்களில் இத்தெய்வங்களைப் பற்றி என்ன இருக்கிறது என்று படிக்கத் தொடங்கினேன். படித்து அறிந்து கொள்கின்றவற்றை தொடர்ந்து எனது முதன்மைப் பதிவான 'கூடல்' பதிவில் 'இலக்கியத்தில் இறை' என்ற வகைப்பாட்டில் எழுதி வருகிறேன். இயன்றால் படித்துப் பாருங்கள்.

ஒருங்கிணைப்பு என்று ஒன்று நிகழ்ந்திருந்தால் அது இயற்கையாக நிகழ்ந்த ஒன்றாகத் தான் இலக்கியங்களை நேரடியாகப் படித்துப் பார்த்ததில் தோன்றுகிறதே ஒழிய வந்தேறித் தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்ற தற்காலத்தில் உள்ள அறிவுஜீவிகளின் தெய்வப் பிரிவினைகளை இலக்கியங்களில் காண இயலவில்லை. காண்பவர்களின் பார்வையைப் பொறுத்தது அது என்பதும் இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

'தவறானவற்றை பரப்பக் கூடாது'

இக்பால் செல்வன். உங்களுக்கும் இதே அறிவுரையை என்னால் சொல்ல இயலும்.

அவரவருக்கு ஆயிரம் அரசியல்கள். அந்த அரசியல் அடிப்படையில் அறிவுஜீவிகள் அவரவர்களுக்குப் பிடித்த தரவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைக் கண்டும் காணாமலும் தெரிந்தும் தெரியாமலும் பல கருத்துகளை வரலாற்று உண்மைகளைப் போல் சொல்லிச் செல்கிறார்கள். யானையைத் தடவிப் பார்த்துக் கருத்து சொல்லும் குருடர்களைப் போலவே எல்லோரும் அவரவர் பார்வையைச் சொல்லி வரும் போது யார் சொல்வது தவறானது; எதனைப் பரப்பலாம்; எதனைப் பரப்பக்கூடாது என்று நாட்டாமை செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது?! சிந்தித்துப் பாருங்கள் நண்பரே! :-)