Tuesday, May 19, 2009

எம்பெருமானார் சரிதம் - இறுதிப்பகுதி

எம்பெருமானாருடைய ஜீவதசையில் நேர்ந்த முக்கிய சம்பவங்களின் காலக்குறிப்பு

1. ஜனனம்: கி.பி. 1017
2. யாதவப்பிரகாசரிடம் படித்தது: கி.பி. 1033
3. ஸ்ரீரங்கம் முதல் தடவை (ஆளவந்தாரைச் சேவிக்கச்) சென்றது: கி.பி. 1042
4. ஸந்யஸித்தது: கி.பி. 1049
5. சோழனுடைய இம்சைக்கு அஞ்சி மைசூர் பிராந்தியம் சென்றது: கி.பி. 1096
6. விட்டலதேவனென்னுமரசனை தம் சித்தாந்தத்தில் சேர்த்துக் கொண்டு விஷ்ணுவர்த்தனனென்று நாமமிட்டது: கி.பி. 1098
7. மேல்கோட்டையில் ஸ்ரீநாராயணப்பெருமாளை எழுந்தருளப் பண்ணியது: கி.பி. 1100
8. மேல்நாட்டிலிருந்தது (வரை): கி.பி. 1116
9. ஸ்ரீரங்கம் திரும்பியது: கி.பி. 1118
10. திருநாட்டை அலங்கரித்தது: கி.பி. 1137

மொத்த ஆயுள்கால வருடங்கள்: 120

**
எம்பெருமானாருடைய திருநாமங்களின் குறிப்பு

திருநாமங்களும் சாற்றினவர்களும்:

1. இராமாநுஜர் - திருமலைநம்பி
2. இளையாழ்வார் - திருமலைநம்பி
3. எதிராசர் - பகவான் வரதன் (பேரருளாளன்)
4. உடையவர் - அழகிய மணவாளன் (ஸ்ரீ ரங்கநாதன்)
5. எம்பெருமானார் - திருக்கோட்டியூர் நம்பி
6. ஸ்ரீபாஷ்யகாரர் - ஸரஸ்வதிதேவி
7. அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான் - திருவேங்கட சம்பவம்
8. நங்கோயிலண்ணர் - கோதையார் (ச்ரி ஆண்டாள்)

**
மஹான்களுடைய பெருமையைச் சொல்லியிருக்கும் பாசுரங்களின் குறிப்பு

1. 'பரமனை, பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர், பயிலும் பிறப்பிடை தோறு எம்மையாளும் பரமரே'

2. 'பரமனை, பணியுமர் கண்டீர், நாளும் பிறப்பிடைதோறு எம்மையாளுடை நாதரே'

3. 'எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஓதும் பிறப்பிடைதோறு எம்மையாளுடையவர்களே'

4 'அவனடியாரடியே கூடுமிதுவல்லால் விடுமாறென்பதென்? அந்தோ! வியன்மூவுலகு பெறிலுமே'

5. 'அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே'

6. 'பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு'

7. 'உன் தொண்டர்கட்கே, அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே'

8. வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை, வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே'

9. 'தென்குருகூர் நம்பியென்றக்கால், அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே'

(நிறைவுபெற்றது)

6 comments:

R.DEVARAJAN said...

உள்ளத் தூய்மையை நல்கும்
உன்னத சரிதம். பல முறை படித்து
இன்புற்றேன்.
மெய்யடியவர்களுக்காகப் பரமன் அர்ச்சா ஸமாதி கடந்து பேசுவதும், விளையாடல் புரிவதும்,
உலகில் வேறு எங்கு காண இயலும் !

தேவ்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சரிதத்தின் சரிதத்தை மின்னாக்கித் தந்தமைக்கு நன்றி குமரன்!

எம்பெருமானாரை வாசிப்பவர் எல்லோரும் அவரைப் போலவே உள்ளத்தன்பைப் பெற்று, எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மேல்நாட்டிலிருந்தது (வரை): கி.பி. 1116
9. ஸ்ரீரங்கம் திரும்பியது: கி.பி. 1118//

இரண்டு ஆண்டுகள் இடையிலா? வழியில் வேறு எங்கேனும் சென்றாரா?

குமரன் (Kumaran) said...

நன்றி தேவ் ஐயா & இரவி.

Mukundhan Kidambi Vijeyaraghavan said...

ஒரு சிறிய திருத்தம். "இளையாழ்வார்" ராமனுஜரின் தாய்-தகப்பனார் அவருக்கு இட்ட திருநாமம்.

குமரன் (Kumaran) said...

நன்றி முகுந்தன் கிடாம்பி விஜயராகவன். இங்கு வலையேற்றப்பட்டிருக்கும் நூலில் இருந்ததை அப்படியே எழுதியிருக்கிறேன்.

தாய்மாமன் தான் குழந்தைக்கு பெயர் இடுவது வழக்கம் என்பதால் எம்பெருமானாரின் பெற்றோர் இட்ட திருநாமத்தை திருமலைநம்பிகள் இட்டதாகச் சொல்வதும் சரி தான் என்று எண்ணுகிறேன்.