Thursday, May 21, 2009

அண்டகோள மெய்ப்பொருள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இருக்கும் இன்னொரு பொத்தகத்தை ஒருங்குறியில் தட்டி இங்கே இடப்போகிறேன். அந்த நூல் நம்மாழ்வார் இயற்றிய 'அண்டகோள மெய்ப்பொருள்' என்ற பாசுரத்திற்கு திரு.இரா. இராகவையங்கார் அவர்கள் எழுதிய பொருளுரை. இந்நூலை தமிழ் மரபு அறக்கட்டளைக்குத் தந்தவரும் மின்னூல் ஆக்கியவரும் ஆன முனைவர். திரு. நா. கணேசன் ஐயா அவர்களுக்கு நன்றி.

8 comments:

Raghav said...

சிறந்த முயற்சி குமரன். எனக்கும் இதுபோல் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது....

குமரன் (Kumaran) said...

கட்டாயம் செய்யலாம் இராகவ். 'முதல் வணக்கம்' இடுகையில் தந்திருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் பட்டியலைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த நூலை ஒருங்குறியில் எழுதத் தொடங்குங்கள்.

நான் ஒருங்குறியாக்கும் நூற்களில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார் இரவி. நீங்கள் ஒருங்குறியாக்கும் நூற்களில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் நாங்கள் இருவரும் பார்த்துச் சொல்கிறோம். :-)

Raghav said...

குமரன் சில நாட்களுக்கு முன்பு விருஷபாத்ரி மகாத்மியம் எனும் நூலின் நகல் பிரதி பார்க்க நேர்ந்தது.. எனக்கு மிகவும் பிடித்தமான சோலைமலை அழகரின் வைபவத்தோடே துவங்குகிறேன்.. உங்கள் ஆசியுடன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// Raghav said...
குமரன் சில நாட்களுக்கு முன்பு விருஷபாத்ரி மகாத்மியம் எனும் நூலின் நகல் பிரதி பார்க்க நேர்ந்தது.. எனக்கு மிகவும் பிடித்தமான சோலைமலை அழகரின் வைபவத்தோடே துவங்குகிறேன்
//

சூப்பரு!
மானைக் கொண்டு மானைப் பிடித்தாற் போலே! :)

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி இராகவ். சோலைமலைப் பெருமையை உடனே சொல்லத் தொடங்குங்கள். எங்கு அந்த மின்னூலைக் கண்டீர்கள் என்றும் சொல்லுங்கள். இயன்றால் அந்த மின்னூலை பதித்தவர்களிடம் நீங்கள் அந்த நூலை ஒருங்குறியாக்கம் செய்கிறீர்கள் என்று சொல்லி ஏதேனும் அனுமதி பெற வேண்டியிருந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். முதல் இடுகையை இட்டவுடன் சொல்லுங்கள். வந்து படித்து அனுபவிக்கிறோம். நன்றி.

குமரன் (Kumaran) said...

வாங்க கண்ணபிரான் இரவிசங்கர். சரியா சொன்னீங்க. குமர மானைப் பார்த்து இராகவ மான் அகப்பட்டது. இரவிசிம்மத்திற்கும் இம்மான்கள் பல நேரம் அகப்படுவதுண்டு. :-)

Raghav said...

//மின்னூலை பதித்தவர்களிடம் நீங்கள் அந்த நூலை ஒருங்குறியாக்கம் செய்கிறீர்கள் என்று சொல்லி ஏதேனும் அனுமதி பெற வேண்டியிருந்தால் பெற்றுக் கொள்ளுங்கள். //

அது தெரியவில்லை குமரன்.. எனது தாத்தா 50 வருடங்களுக்கும் மேலாக வைத்திருந்த பழைய புத்தகம் அது.. மிகவும் கிழிந்து போயிருந்த்தால் எனது அண்ணா அதனை நகல் எடுத்து வைத்திருந்ததை ஒருமுறை வீட்டில் பார்த்தேன்.. நூபுரகங்கை சிறப்பு, வர்ணணை.. மண்டூக சாப விமோசன வரலாறு என்று சுவையாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவில் இந்த நிகழ்ச்சியை வைகை ஆற்றில் மண்டூக விமோசனத்தின் போது படிப்பார்கள். அதனைத் தான் நான் எழுதலாம் என்று உள்ளேன்.

குமரன் (Kumaran) said...

சரி இராகவ்.