அண்டகோள மெய்ப்பொருள்
தற்சிறப்புப்பாயிரம்
சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் - பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.
---------*---------
ஆழ்வார்
சங்கத்தார்க்கு எழுதிய அகவல்
----------*------------
அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
5 வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
10 யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
15ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
இது 'மயர்வற மதிநலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் 'அண்டகோ ளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.
இதன் பொருள்.
(அடுத்த இடுகையிலிருந்து பொருளுரை தொடங்கும்).
4 comments:
இந்தப் பாடல் ஏதோ புறநானூறு/ பதினெண்கீழ்க் கணக்குப் பாடல் போல இருக்கு! :)
குருகூர்ப் புளிக்கண் உறைந்த காரி வேளாளன் மகனான காரி மாறன் எழுதியது-ன்னு அடிக்குறிப்பு போட்டா கிட்டத்தட்ட அப்படியே இருக்கும் போல இருக்கே! :))
இது நாலாயிரப் பனுவல்களில் உள்ளதா குமரன்?
தமிழ்ச் சங்கத்தார்க்கு மாறன் எதுக்கு அகவல் எழுதி அனுப்பனும்? இதன் கதையை அறியத் தாருங்களேன்!
ஆமாம் இரவி. அப்படித் தான் இருக்கிறது. இது புறநானூற்றில் ஒரு பாடல் என்று சொன்னால் எளிதில் நம்பிவிடலாம்.
இந்தப் பாடல் தனிப்பாடலாகத் தான் கிடைத்தது என்று எண்ணுகிறேன். நாலாயிரப்பனுவலில் இல்லை.
எனக்கு சரியா அந்தக் கதை தெரியலை இரவி. உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா சொல்லுங்க.
Post a Comment