Thursday, May 21, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - முகவுரை

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

முகவுரை

'அண்ட கோளத்தாரணு' என்ற பாசுரம், 'ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்' என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் 'இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை' என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.

அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், 'அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.

இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.

இங்ஙனம்,
ரா. இராகவையங்கார்.

4 comments:

நா. கணேசன் said...

Sri. Kumaran,

R. Raghava Aiyangar's grandson,
Dr. Vijayaraghavan gave me this book several years ago.

I made the PDF some months ago, and placed it in THF website.

anbudan,
N. Ganesan

குமரன் (Kumaran) said...

கணேசன் ஐயா,

எந்த முன்னொட்டும் இல்லாமல் என்னை வழக்கம் போல் குமரன் என்றே அழையுங்கள்.

நேற்று ஏதோ ஒரு அவக்கரத்தில் இந்த நூலை மின்னாக்கம் செய்தவர் கண்ணன் ஐயா என்று தவறாகப் படித்துவிட்டு அப்படியே எழுதிவிட்டேன். மன்னிக்கவும். நீங்கள் மின்னாக்கம் செய்த இந்த நூலை ஒருங்குறியாக்கம் செய்வதில் எந்த தடையும் இல்லை என்று எண்ணுகிறேன். சரி தானே ஐயா?

நன்றிகளுடன்
குமரன்.

நா. கணேசன் said...

Kumaran,

It is great and I am thankful that
you are keying in a rare akaval of Nammaazhvaar. May God bless you.

Please note item (24) in Tamil Heritage Foundation which says"


24. அண்ட கோள மெய்ப்பொருள் (1934) Anda KoLa MeypPoruL (1934)
[ Published on: 11 Feb 2008 ]

This book is a contribution from Dr.N.Ganesan of NASA, Texas, USA.
pdf e-Book preparation:Dr.N.Ganesan
You may like to know him better through his blog: http://nganesan.blogspot.com/)"

http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html

Best wishes,
N. Ganesan

குமரன் (Kumaran) said...

நன்றிகள் ஐயா.

ஆமாம் ஐயா. அந்தப் பக்கத்தில் இருந்த தகவலைத் தான் சரியாகப் படிக்காமல் தவறுதலாக முந்தைய இடுகையில் சொல்லிவிட்டேன். இன்று உங்களது முதல் பின்னூட்டத்தைப் படித்தவுடன் எனது தவறு புரிந்தது. அந்த இடுகையிலும் சரி செய்துவிட்டேன்.

நன்றி.